சிவகார்த்திகேயன் மாவீரன் பட ரிலீஸ் அப்டேட்..!!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வந்த ப்ரினிஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தும், இந்த படம் வெளிவந்ததும் தெரியாது, போனதும் தெரியாது.
இதனால் சிவகார்த்திகேயனுக்கு அடுத்து ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர் நிறைய படங்களில் நடித்து வந்தால், மாவீரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார்.
சுமார் ரூ. 70 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்துக்கு வியாபார வட்டமும் பெரிதாக உள்ளது. சமீபத்தில் மாவீரன் படத்தில் இடம்பெற்றிருந்த சீன் ஆ... சீன் ஆ பாடல் வெளியானது. அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாவீரன் படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருவதால், அந்த படத்தை முதலில் திரைக்கு கொண்டு வருவதற்கு சிவகார்த்திகேயன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் மாவீரன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் புதுச்சேரியில் நடந்து வருகிறது. இம்மாத இறுதியுடன் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு, அடுத்த மாதம் முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளன. மாவீரன் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்கும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 - cini express.jpg)