அப்பா பிறந்திருக்கிறார்- இரண்டாவதாக ஆண் குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன்..!

 
மனைவி  மற்றும் மகளுடன் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கு அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த மாமன் மகளான ஆர்த்தியை பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு வயதில் ஆராதனா என்கிற பெண் குழந்தை உள்ளது.

அதை தொடர்ந்து  ஆர்த்தி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கணவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஆர்த்தியும் வாக்களிக்க வந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பலரும் வாழ்த்து கூறி பதிவிட்டனர்.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன்” 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web