சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எழுதிய கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..?

 
1

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா‘ பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில்  ‘மாவீரன்‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘பிரன்ஸ்‘ படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இந்நிலையில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான ‘டான்‘ படம் 100 கோடி வசூலை தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து  இயக்குனர் சிபி சக்ரவர்த்தி ரஜினியை சந்தித்து கதை சொல்லி உள்ளார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு அவர் சொன்ன கதை திருப்தி அளிக்கவில்லை என்று ரஜினி தரப்பிலிருந்து சிபி சக்ரவர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரஜினிக்காக உருவாக்கிய அந்த கதையை தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மாவீரன் படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் அதன் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web