கவுதம் மேனன் உடன் இணையும் சிவகார்த்திகேயன்..?

 
சிவகார்த்திகேயன் மற்றும் கவுதம் மேனன்
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் நெட்ஃப்ளிஸில் வெளியான ‘கிடார் கம்பி மேலே நின்று’ என்கிற ஆந்தாலஜி படம் விமர்சனத்திற்குள்ளானது. சூர்யா முதன்மை வேடத்தில் நடித்திருந்த இந்த படம் பார்வையாளர்களை பெருமளவில் கவராமல் போனது.

இதற்கிடையில் சிம்புவுடன் ‘நதிகளிலே நீராடு சூரியன்’ என்கிற படத்திற்காக மீண்டும் இணையவிருந்தார் கவுதம் மேனன். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை, படத்திற்கான தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு படங்களுக்கும் ஒரே கதையா..? அல்லது வேறுவேறு கதையா? என்பது தெரியவில்லை. இதற்கிடையில் திருத்தணியில் படத்திற்கான முதற்கட்ட ஷுட்டிங் வெற்றிகரமாக துவங்கி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதனுடைய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்த படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை காமெடி கலந்த கமர்ஷியல் படங்களில் மட்டுமே சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அதனால் இந்த முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web