ஓ.டி.டி-யில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்..!
 

 
’டாக்டர்’ திரைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் தமிழக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் கோட்டபாடி ஜே. ராஜேஷ் இருவரும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் மூலம் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகி வரும் சூழலில், டாக்டர் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இந்த படம் கடந்த மார்ச் 26-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக அந்த முடிவை படக்குழுவினர் மாற்றி அமைத்தனர். அதை தொடர்ந்து வரும் மே 14-ம் தேதி ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது.

ஆனால் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் ‘டாக்டர்’ பட வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்துள்ளது. 

From Around the web