ஓ.டி.டியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்..?

 
ஓ.டி.டியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படம் நேரடியாக ஓ.டி.டியில் ரிலீஸ் செய்யப்படுவதற்கான ஆலோசனை நடைபெற்றுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 65’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படம் முன்னதாக மார்ச் மாதம் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்தன. பிறகு திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது.

தற்போது இந்த படத்தை ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. எனினும் ஓ.டி.டி-யில் இந்த படம் வெளியாவதற்கே அதிகப்பட்ச வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த படம் மே மாதம் 14-ம் தேதி ரம்ஜான் பண்டிகை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களுக்கு தமிழக அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web