சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் விசேஷம்...? பிடிபட்ட புகைப்படம்..!

 
சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் விசேஷம்...? பிடிபட்ட புகைப்படம்..!

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரோ என்கிற சந்தேகத்தை கிளம்பும் வகையிலான புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு திரை நட்சத்திரங்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.

அப்போது ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது போன்று தெரிந்தது. வயிற்றை துப்பட்டாவால் மறைத்தபடி மிகவும் நிதானமாக நடந்து வந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர். 

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற மகள் இருப்பது குறிப்படத்தக்கது. சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ படத்தில் ”வாயாடி பெத்த புள்ள” என்கிற பாடலை ஆராதனா பாடியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து தற்போது சிபி என்கிற புதுமுக இயக்குநர் இயக்கும் ‘டான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
 

From Around the web