சிவகார்த்திகேயனின் ‘வாழ்’ பட டிரெய்லர் வெளியீடு..!

 
வாழ் பட டிரெய்லர்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள ‘வாழ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அருவி படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழ்’. இது அருவி படம் போன்று சமூகக்கருத்தை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

ஒராண்டுக்கு முன்னதாக இந்த படத்தின் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியவில்லை. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பிட்ட பின்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. 

இதன் காரணமாக நெருக்கடியில் இருந்த படக்குழு, ‘வாழ்’ படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தது. அதன்படி அவரும் 16-ம் தேதி இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடும் நிகழ்வு நேற்று நடந்தது. ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட நிகழ்வில் வாழ் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டன. அதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் அஞ்சலி வரதன், கவிதா பாரதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லரை தொடர்ந்து ‘வாழ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

From Around the web