ஓடிடியில் ரிலீசாகும் 'சிவக்குமாரின் சபதம்' ..!!

 
1

நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவருக்கு இளைஞர்கள் மத்தியில் ரசிகர்கள் ஏராளம். ஆல்பம் வெளியிட்ட போது இருந்த ரசிகர்களை விட, சினிமாவுக்கு வந்த பிறகு இன்னும் பிரபலமானார். 

‘வணக்கம் சென்னை’ படத்தில் அனிருத் இசையில் பாடியதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.அந்த வகையில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிவக்குமாரின் சபதம்’. ஆதியே இயக்கியுள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் மற்றும் ஹிப்ஹாப் தமிழா படக்குழு இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார். 

1

இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சிவகுமாரின் சபதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் டிச. மாதம் 3-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

From Around the web