கேப்டன் மில்லரில் இருந்து புறப்பட்டுச் சென்ற சூப்பர் ஸ்டார் நடிகர்..!!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் தன்னுடைய காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக பிரபல சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர் தெரிவித்துள்ளார்.
 
sivarajkumar

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

இப்படத்தில் கன்னட சினிமாவின் புகழ் பெற்ற நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் தனுஷுக்கு இணையாக பெயர் பெற்றது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, அவர் ஷூட்டிங் முடித்துக்கொண்டு சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டாராம். இந்த படத்தை சத்யஜோதி ஃப்லிம்ப்ஸ் மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. 

captain miller

 சிவராஜ்குமார் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, அவர் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

விரைவில் படப்பிடிப்பு முடியவுள்ளதை அடுத்து, படக்குழு படம் தொடர்பான புதிய போஸ்டரை விரைவில் ரிலீஸ் செய்யவுள்ளனர். அதை தொடர்ந்து கேப்டம் மில்லருக்கான இறுதிக்கட்ட பணிகள் துவங்கும். 

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ’உரியடி’ விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

From Around the web