எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்..!!

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ரிலீஸாகாமல் இருக்கும் ‘பொம்மை’ படத்தில் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
 
sj suriyah

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்த எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராகிவிட்டார். பல முன்னணி நடிகர்களுடன் வலுவான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் அதேவேளையில், தனி ஹீரோவாக நடிக்கும் படங்களையும் கமிட் செய்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா நடித்து நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருக்கும் ‘பொம்மை’ படத்துக்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது. அதன்படி பொம்மை படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ராதா மோகன் இயக்கியுள்ளார், ப்ரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடித்ஹ்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள், கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. 

ரிச்சர் எம். நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் ஒரு காதல் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பொம்மை படம் ஜூன் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web