காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா!

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து தென்னிந்தியளவில் கவனம் பெற்றுள்ளார். தற்போது, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐசி, வீர தீர சூரன் படங்களில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் 50-வது படமான ராயன் மற்றும் தெலுங்கில் நானி நடிக்கும் சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை – தமிழில்) படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், நேற்று நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் படக்குழு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது. அதில், அருணகிரி என்கிற பெயரில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
Wishing the incredible actor and Director @iam_SJSuryah sir a very happy birthday from the team of #VeeraDheeraSooran, Your hard work and passion continue to inspire us all! Here's to more amazing performances ♥️@chiyaan #Kaali #காளி#VeeraDheeraSooran
— HR Pictures (@hr_pictures) July 20, 2024
An #SUArunkumar Picture… pic.twitter.com/muPJ1eZT7z