சாய் பல்லவி உடன் காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்..!!

லியோ படக்குழுவை தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவுள்ளது. 
 
 
saipallavi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தின் முதல் மூன்று கட்ட படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் காஷ்மீரில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, படக்குழு சென்னை திரும்பியது. 

இந்நிலையில் லியோ படக்குழுவை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறுகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

sivakarthikeyan

முன்னதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உட்பட்ட படக்குழு அனைவரும் லோகேஷ் கனகராஜை சந்தித்துள்ளனர். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த முடியுமா? அங்கு சூழல் எப்படி இருக்கிறது? குறிப்பிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடத்துவதற்கு செய்ய வேண்டிய நடைமுறைகள் என்ன? உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. 

kamal haasan

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படம் சிவகார்த்திகேயனின் 21-வது படமாக தயாராகவுள்ளது. காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, எப்போது படப்பிடிப்பு துவங்கும் என கேள்வி எழுந்துள்ளது. எனினும் எஸ்.கே 21 பட ஷூட்டிங் சற்று காலதாமதமாகவே துவங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web