எஸ்.கே ப்ரோ... ஏன் இப்படி ஒரு முடிவு... கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..!

நடிகர் சிவகார்த்திகேயன் ’சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி சில படங்கள் தயாரித்தார் என்பதும் சில படங்களை விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆர்டி ராஜா என்பவருடன் இணைந்து சில படங்கள் தயாரித்த நிலையில் அந்த படங்கள் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை கொடுத்தது என்பதும் இதனால் சிவகார்த்திகேயனுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது சினிமாவில் நடித்ததால் கிடைத்த பணத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் நாளை முழுதாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தான் சிவகார்த்திகேயன் என்ன லூஸா? நன்றாகத்தானே அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது? அப்படி இருக்கும்போது எதற்காக திடீரென மீண்டும் சொந்த படம் எடுக்கிறார்? என்ற கேள்விகளை அவரது ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.
🔔 The first-look teaser for our #SKPsNext will be released tomorrow.
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) April 10, 2024
Stay tuned to catch a glimpse!@Siva_Kartikeyan | @KalaiArasu_ pic.twitter.com/5153DxXNy2