அஜித்துடன் நடித்த காட்சியை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி எஸ்.கே..!

 
அஜித்துடன் நடித்த காட்சியை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி எஸ்.கே..!

நடிகர் அஜித்துடன் நடித்த காட்சியை பதிவிட்டு அவருடைய 50-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவாகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் ‘தல’ என்று கொண்டாடப்படும் அஜித்திற்கு இன்று 50-வது பிறந்தநாள். அதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்கள் வாயிலாக பிரபலங்கள் பலரும் அஜித்தின் பிறந்தநாளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரியளவில் நடைபெறவில்லை. சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்து பதிவிட்டு ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்த காட்சியை புகைப்படமாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏகன் படத்தில் அஜித் மூத்த மாணவராக நடித்த நிலையில், அவருடன் படிக்கும் சக மாணவனாக சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் அஜித்துக்கு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 
 

From Around the web