இன்று மாலை வெளியாகிறது ‘SK21’ திரைப்படத்தின் தலைப்பு..!!

 
1

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் SK21 .

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் .

இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு நீண்ட நாட்களாக ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு சிறப்பான தரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் மற்றும் துப்பாக்கியை கையாளும் விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’ திரைப்படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை இப்போதே ரசிகர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

From Around the web