வெள்ளித்திரையில் நுழைந்த சின்னத்திரை நடிகை..!!

 
1

சின்னத்திரையில் கதையின் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவார் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7-ம் வகுப்பு சி பிரிவு‘ தொடரின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில தொடர்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் ‘டான்சிங் கில்லாடிஸ், வொண்டர் வுமன், பேட்ட ராப், ஆயுத எழுத்து‘ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு வந்தார்.

வெள்ளித்திரையிலும் ’10 எண்றதுக்குள்ள, ரங்கூன்‘ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ‘இருளில் ராவணன்‘ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் துஷாந்த் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமவுலி, விஜய் டிவி முல்லை, யூடியூபர் கட்டெறும்பு ஸ்டாலின் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.வி.எஸ்.சேதுபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் சேதுபதி கூறியதாவது, “ முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த க்ரைம் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கருத்து. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது “ என்று கூறியுள்ளார்.

From Around the web