கன்னிகாவுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சினேகன்.!
பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கு பற்றிய சினேகன் தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சொன்னார். ஆனால் அவர் யார் என்பது பற்றி சொல்லவில்லை. ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து அதன் பிறகு பல பாடல்களுக்கு சினேகன் வரி எழுதி உள்ளார்.
90ஸ் கிட்ஸ் அதிக அளவில் முனுமுனுக்கும் பாடல்கள் இவருடையதாக தான் இருக்கும். ஆனால் இது இவர்தான் எழுதிய பாடல் என்று பலருக்கும் தெரியாது. அதை தெரிய வைக்கும் வகையில் தற்போது கன்னிகாவை திருமணம் செய்த பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் வீடியோக்களில் தான் எழுதிய பாடல் தான் என்று குறிப்பிட்டு வருகின்றார்.
இந்த நிலையில், இன்றைய தினம் கன்னிகாவுக்கு வளைகாப்பு செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் சினேகன். இதனை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கன்னிகா தான் கர்ப்பமாக இருப்பதை தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது 5 மாதத்தில் அவருக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார் சினேகன். குறித்த புகைப்படங்கள் இதோ,