விவாகரத்து கோரும் ‘சிநேகிதியே’ பட நடிகை..! மன்மத அம்பு படத்திலும் நடித்தவர்..!  

 
1

2000-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சிநேகிதியே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சு பிள்ளை. அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் உள்ளிட்டோர் நடித்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் தயாரிப்பாளர் குஞ்சு குரூப்பின் மனைவி மஞ்சு குரூப்பாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை தமிழ் ரசிகர்கள் மறக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார்.

இவருக்கும் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவுக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தயா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். மஞ்சு பிள்ளையும், சுஜித் வாசுதேவும் பிரிந்து வாழ்கிறார்கள் போன்று என மலையாள திரையுலகில் பேச்சாக இருந்தது. ஆனால் மஞ்சுவோ, சுஜித்தோ அது பற்றி விளக்கம் அளிக்காமல் இருந்து வந்தார்கள்.

Manju Pillai

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவாகரத்து குறித்து சுஜித் வாசுதேவ் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் சுஜித் கூறியதாவது, கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நானும், மஞ்சு பிள்ளையும் பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்து வேலை எல்லாம் முடிந்துவிட்டது. விவாகரத்து பெற்றாலும் மஞ்சு மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நாங்கள் இன்னும் நட்பாக பழகி வருகிறோம். அவர் ஒரு திறமையான கலைஞர் என்றார்.

மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சுஜித் வாசுதேவ். 24 ஆண்டுக கால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Manju pillai

இது மஞ்சு பிள்ளையின் இரண்டாவது திருமணமாகும். முன்னதாக நடிகர் முகுந்தன் மேனனை திருமணம் செய்தார். அந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகே 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி சுஜித் வாசுதேவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web