இரண்டே நாளில் இவ்வளவு கோடியா..? துவம்சம் செய்யும் டாக்டர்..!

 
டாக்டர் படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் டாக்டர் படத்தின் முதல் இரண்டு நாட்கள் குறித்த வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 9-ம் தேதி வெளியான படம் டாக்டர். கொரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கி இருந்த மக்களுக்கு நகைச்சுவை விருந்தாக இந்த படம் வெளியானது.

எதிர்பார்த்தப்படியே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா விதிமுறைகள் அமலில் இருந்தாலும் குடும்பமாக வந்து தியேட்டரில் டாக்டர் படம் பார்க்கின்றனர். குறிப்பாக பெண்களும் தொடர்ந்து படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ள விபரம் தெரியவந்துள்ளது. அதேபோல வெளிநாடுகளில் ரூ. 6 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

மேலும் கர்நாடகா, ஆந்திராவில் ரூ. 1 கோடியும், வட இந்திய மாவட்டங்களில் ரூ. 22 லட்சமும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃப்ஸில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலம் டாக்டர் படம் வெளியான இரண்டே நாட்கலில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளது தெரிய வருகிறது.

From Around the web