அப்போ பொய் சொன்னது சரி..! அதை இப்ப ஏன் சொல்லணும்..? சராமாரி கேள்வி..!!

 
செல்வராகவன் மற்றும் தனுஷ்

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தின் ஒருவன்’ படம் குறித்து மறைக்கப்பட்ட வரலாறு என்று இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ள தகவல் குறித்து இணையதளங்களில் காரசார விவாதம் நடந்து வருகிறது.

தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென், அபிநயா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து ட்விட்டரில் செல்வராகவன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் ரூ. 18 கோடி தான். இதுவொரு மெகா பட்ஜெட் படம் என மிகைப்படுத்தி காட்ட, படம் ரூ. 32 கோடி பட்ஜெட் என அறிவிக்கப்பட்டது. என்ன ஒரு முட்டாள்தனம். உண்மையான பட்ஜெட் தொகையை படம் வசூலித்திருந்தாலும் அது சராசரியான வசூல் என்றே கருதப்பட்டது. இதன்மூலம், என்ன முரண்பாடாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக்கொண்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் பலரும், 11 ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவத்தை குறித்து செல்வராகவன் இப்போது எதற்கு குறிப்பிட்ட பேசவேண்டும். ஒருவேளை ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட தயாராகி வருகிறாரோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

From Around the web