இன்று சோபிதா-சைதன்யா திருமணம் : படை எடுத்து வரும் பிரபலங்கள்!
இன்று டிசம்பர் 4ம் தேதி நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் திருமண சடங்களுடன் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, சைதன்யா - சோபிதாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாது.
இவர்களின் திருமணம், நாகர்ஜூனாவின் குடும்ப முறைப்படி ஹைதராபாத்தின் பிரபலமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடக்க உள்ளது. இவர்களின் திருமணத்திற்கு 300 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டகுபதி, மெகா குடும்பங்கள்,மகேஷ் பாபுவின் குடும்பம், அமிதாப் பச்சன், ஆமிர் கான், பாலிவுட் நட்சத்திரங்கள், எஸ்.எஸ். ராஜமௌலி, மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் சிலர் என பிரபலமானவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். சோபிதா - நாக சைதன்யா திருமண சடங்குகள் நடக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.
As pre-wedding celebrations kick off at Sobhita Dhulipala and Naga Chaitanya's homes, let's take a look at their love story.#NewsMo #sobhitadhulipala #NagaChaitanya #Shona pic.twitter.com/C4TGUkCmVR
— IndiaToday (@IndiaToday) December 3, 2024