மோகன்லால் மகனுக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்-க்கும் சம்திங் சம்திங்..?  

 
1

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் தயாரிப்பாளர் பிரியதர்ஷனின் மகளாவார்.தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான  ‘மாநாடு’ படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனார்.

இந்நிலையில் நடிகர் மோகன்லாலின் மகனான பிரணவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி பரப்பினர்.

இது குறித்து மோகன்லாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலிளித்த அவர்” மீடியாக்கள் தேவையற்ற சர்சைகளை தவிர்க்க வேண்டும். இருவரும் சென்னையில் ஒன்றாக வளர்ந்தவர்க்ள் நல்ல நண்பர்கள். அதுமட்டுமல்லாமல் என் மனைவி சித்ராவும், கல்யாணியின் தாய் லிஸ்ஸியும் நல்ல நண்பர்கள் என தெரிவித்தார். தொடர்ந்து தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக கஷ்மீருக்கு சுற்றுள்ள சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மீண்டும் காதல் சர்சையை கையில் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இவர்கள் இணைந்து நடித்த ‘ஹிருதயம்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

photo

  

From Around the web