சினிமா கைவிட்டதால் சீரியல் பக்கம் ஒதுங்கிய சோனா..!

 
நடிகை சோனா

சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சோனா.

தமிழ் திரைத்துறையில் கவர்ச்சி நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தவர் சோனா. தமிழில் வெளியான சில படங்களை சொந்தமாகவும் அவர் தயாரித்துள்ளார். 

இந்நிலையில் விரைவில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள ‘அபி டைய்லர்’ என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சோனா. அதுதொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

சந்தானம் மற்றும் அவரது நண்பர் சேது இணைந்து நடித்த வாலிபராஜா படத்தை இயக்கியவர் சாய் கோகுல். இவர் தான் அபி டைய்லர் சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

From Around the web