காமெடி நடிகையால் மாரி சீரியலில் இருந்து வெளியேறிய சோனா..!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் இருந்து நடிகை சோனா வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.
 
sona

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மாரி’ சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஃபேண்டசி கலந்த சூப்பர்நேச்சுரல் குடும்பக் கதையாக இது ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக இந்த சீரியலை வி. சதாசிவம் என்பவர் தயாரித்து வந்த நிலையில், அவர் சில பிரச்னைகள் காரணமாக நாடகத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது மாரி சீரியலை ரத்தினம் வாசுதேவன் என்பவர் இயக்கி வருகிறார். ஆதர்ஷ் ஹெச்.எஸ் மற்றும் ஆஷிகா படுகோனே இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அவர்களுடன் தீப்தி கபில். சோனா, சிவா சுப்பிரமணியம், அபிதா, டெல்லி கணேஷ், சையிரா பானு, ஷப்னம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நாடகத்தில் மாமியரான சோனாவுக்கு மூன்று மருமகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் ஷப்னம். சீரியல் துவங்கிய ஆரம்ப நாட்களில் சோனா மற்றும் ஷப்னம் உயிருக்கு உயிராக பழகியுள்ளனர். மேலும் ஷப்னமின் காமெடி சென்ஸ், டைமிங் சென்ஸ் சீரியலுக்கு அதிகம் தேவைப்படுவதாக உள்ளார்.

சீன் பேப்பரில் இல்லாத வசனங்களை டைமிங்கில் பேசுவது அவருடைய சிறப்பாக உள்ளது. அதுபோன்ற காட்சிகளுக்கு ரசிகர்களிடையே வரவேற்பும் உள்ளது. அப்படியொரு காட்சி படமாக்கப்பட்ட போது, ஷப்னம் நடிகை சோனாவின் உடல் எடையை குறித்து நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் பாதியிலேயே ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிவிட்டார்.

shabnam

அந்த பிரச்னையை சமாதானம் செய்து மீண்டும் சோனாவை சீரியலுக்குள் கொண்டு வந்துள்ளனர். அவரும் ஷப்னமிடம் எந்தவிதமான நெருக்கம் காட்டாமல் நடித்து வந்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு நாளில் மறுபடியும் ஏதோ இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தரக்குறைவாக பேசியுள்ளனர்.

அந்த வாக்குவாதம் உச்சமடைந்த நிலையில், சோனா சீரியலை விட்டு விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து முடியாமல் போனதை அடுத்து, அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க வேறொரு நடிகையை தேடி வருகின்றனர். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web