‘பீஸ்ட்’ படத்தின் பாடல் ப்ரோமோ..!! பிரத்யேக படப்பிடிப்பு நடத்திய நெல்சன்..!

 
1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவு பெற்றது. விரைவில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டிற்காக பிரத்யேகமான படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளது படக்குழு. நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் நிறைந்த பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளது.

ஏற்கெனவே, டாக்டர் திரைப்படத்தின் ‘ஓ பேபி’ பாடலின் புரோமோ வீடியோவை இயக்குநர் நெல்சன் இவ்வாறு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி, விஜய் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலை கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் 2022-ம் ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web