ஊடகங்கள் மீது பொங்கி எழுந்த சோனியா அகர்வால்..!

 
சோனியா அகர்வால்

கன்னட நடிகை சோனிய அகர்வால் கைது செய்யப்பட்டதற்கு ட்விட்டரில் ஊடகங்கள் மீது சோனியா அகர்வால் பொங்கி எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருள் வைத்திருந்த விவகாரத்தில் கர்நாடாகவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோனியா அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையான சோனியா அகர்வால் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவிட்டன.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொங்கி எழுந்துவிட்டார் சோனியா அகர்வால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் தரும் அளவுக்கு அடுத்தடுத்து போன் அழைப்புகள் மெசேஜ்கள் வர காரணம் இந்த மீடியா தான். ஊடகவியலாளர் என்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, தவறான செய்திக்கு என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய ஊடகவியலாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web