'சூதுகவ்வும் 2' உறுதியானது..!! ஹீரோ இவரா?

 
1

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு ‘மிக நேர்மையாக, ஆட்களைக் கடத்தும் கதை, நிதி அமைச்சரின் மகனைக் கடத்தினால் என்ன ஆகும் என்பதே… படத்தின் முழுகதை. வசனங்களும் திரைக்கதையும் ஒரு சாதாரண கதையை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற படம். 

இந்நிலையில், சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் சி.வி குமார் தயாரிப்பில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சூதுகவ்வும் படத்தின் 2ம் பாகத்தின் போஸ்டர் தற்போது படக்குழு வெளியிட்யுள்ளது. இப்படத்தில் நடிகர் சிவா நடிக்க உள்ளதாகவும், விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.  இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.  இவர்களுடன் காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

From Around the web