விரைவில் பிரபல சீரியலில் நேரம் மாற்றப்படுகிறது..! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், பாக்கியலட்சுமி சீரியல் என்பவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றது. அதிலும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டுங்கில் படிப்படியாக முன்னேறுகின்றது.

இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்று நேரம் மாற்றம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு புது முகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நீ நான் காதல் என்ற சீரியலின் நேரம் மாற்றம் இடம்பெற உள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இந்த சீரியல் மதியம் ஒரு மணிக்கு மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி  உள்ளது. எனினும் இது தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

From Around the web