விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! பம்பும் சிம்புவின் ‘பத்து தல’..!!

விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
viduthalai

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படங்களில் ஒன்று ‘விடுதலை’. சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை. 

இந்த படம் மொத்தம் 2 பாகங்களாக தயாராகியுள்ளது. அதில் முதல் பாகம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது விடுதலை முதல் பாகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி விடுதலை முதல் பாகம் வரும் 31-ம் தேதி வெளியாகிறது. அதேநாளில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படமும்  வெளியாகவுள்ளது. முன்னதாக, மார்ச் 31-ம் தேதி ‘பத்து தல’ படம் மட்டுமே வெளியாவதாக இருந்தது. 

pathu thala

இந்நிலையில் விடுதலை படமும் அதேநாளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘பத்து தல’ படத்தின் வணிகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் 2 படங்களுமே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதனால் இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

From Around the web