சூர்யா 42- இத்தனை நாட்கள் நடந்தது வெறும் ப்ரோமோ படப்பிடிப்பா..??

 
suriya 42

சூர்யாவின் 42-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், அவை டைட்டில் ப்ரோமோவுக்காக நடந்த ஷூட்டிங் என்கிற விவரம் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யாவின் 42-வது படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயரிடப்படாத நிலையில், தற்போதைக்கு ‘சூர்யா 42’ என்று படக்குழு குறிப்பிட்டு வருகிறது. மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. 

சூர்யா கதாநாயகனாக நடிக்கும் நிலையில், திஷா பதானி, மிருனாள் தாகூர், ஆனந்த ராஜ், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரலாற்றுப் பின்னணியில் தயாராகும் ‘சூர்யா 42’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகி வருகிறது.

suriya 42

ஏற்கனவே இந்த படத்தின் அனிமேஷன் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த வாரம் சூர்யா 42 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தது. 

முன்னதாக சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவா, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இத்தனை நாட்கள் நடந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்து சூர்யா 42 டைட்டில் கிளிம்ப்ஸுக்காக நடத்தப்பட்டுள்ளது. இன்னும் படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் முறையாக துவங்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. வெறும் கிளிம்ப்ஸ் காட்சிகளுக்கே பல மாத படப்பிடிப்பு என்றால், முழு நீள படத்துக்கு எத்தனை நாட்கள் ஆகுமோ என்கிற கேள்வியை அவர்கள் சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். ஆனால் சூர்யா 42 படத்தை இந்தாண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web