"GOLDEN LYNX" விருதை வென்றிருக்கிறது சூரியின் "கொட்டுக்காளி"..!

 
1

சூரி கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் அடுத்த படமான "கொட்டுக்காளி"  எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்  பி.எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்."கொட்டுக்காளி"  திரைப்படமானது 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக கடந்த  பிப்ரவரி 16 ஆம் தேதி  திரையிடப்பட்டது.

வர்த்தக ரீதியாக இன்னும் வெளிவராத "கொட்டுக்காளி" திரைப்படமானது உலக அளவில் கொண்டாடப்படும் பெரும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அனேக விருதுகளை சொந்தமாக்கியுள்ளது.இந்நிலையில் போர்த்துக்கலில் இடம்பெற்ற 20வது FEST - புதிய இயக்குனர்கள்/புதிய திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த திரைப்படத்திற்கான "GOLDEN LYNX" விருதை வென்றிருக்கிறது "கொட்டுக்காளி" திரைப்படம்.

From Around the web