சாரி பிரதர்...ஏன் இப்படி கோவிச்சுகிட்டிங்க.. சென்னைக்கு வாங்க பாத்துக்கிடலாம்.. ஜெயம் ரவியின் பதிவு..!

 
1

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாளில் அவர் மதுரையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக படம் பார்த்தார்.

அதன் பின்னர் அவர் மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நிலையில் சில நிர்வாகிகளுடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஜெயம் ரவி அவர்களுடன் செல்பி எடுக்க தான் முயற்சி செய்ததாகவும், ஆனால் முடியவில்லை என்றும், அது தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்றும், செல்பி எடுக்க முடியாவிட்டால் எதற்காக எங்களை எல்லாம் வர வைக்க வேண்டும் என்றும் வருத்தமாகவும் கோபமாகவும் தனது சமூக  வலைத்தளத்தில்  பதிவு செய்திருந்தார்.இந்த பதிவுக்கு ஜெயம் ரவி பதிலளித்த நிலையில் ’சாரி பிரதர், ஏற்கனவே 300 பேருக்கு மேல் நான் செல்பி எடுத்துக் கொண்டேன், உங்களை எப்படி தவற விட்டேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் கோபித்துக் கொள்ள வேண்டாம், சென்னை வாருங்கள், எத்தனை செல்பி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் , வெறுப்பை வளர்க்க வேண்டாம், அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து சமாதானமான அந்த ரசிகர் தனது பதிவை நீக்கி விட்டார் என தெரிகிறது.

From Around the web