ரஜினிகாந்த் வீட்டில் மீண்டும் திருட்டு- சவுந்தர்யா போலீசில் புகார்..!!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளும் திரைப்பட இயக்குநருமான சவுந்தர்யா தன்னுடைய ஆடம்பர காரின் சாவியை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
soundarya

இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சவுந்தர்யா அளித்துள்ள புகாரில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டைக்கு தனது ஆடம்பர காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது அந்த காரின் மற்றொரு சாவி தொலைந்துபோய்விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தன் வீட்டில் நூறு சவரணுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் காணாமல்போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். 

அதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றிய ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் வெங்கடேசனும் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்த காவல்துறை, அவர்களிடம் இருந்த நூறு பவுனுக்கும் மேற்பட்ட நகைகள் கைப்பற்றினர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பிரபலங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிப்புக்குள்ளாக வேண்டி வந்தது. அதற்குள் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கார் சாவி தொலைந்து போனது தொடர்பாக அளித்துள்ள புகார் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
 

From Around the web