கணவருடன் திருச்செந்தூர் கோயிலில் வழிபாடு நடத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த்...!

 
சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கோச்சடையான், விஐபி-2 பட இயக்குநரும், முன்னணி வரைகலை கலைஞராக இருப்பவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கும் பிரபல நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமனம் நடைபெற்றது.

ஏற்கனவே இவர்களுக்கு வேத் என்கிற மகன் இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமாக உள்ளார் சவுந்தர்யா. இந்நிலையில் கணவருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இவர்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் கோயில் யானை தெய்வானைக்கு பழங்கள் மற்றும் கருப்புகள் உள்ளிட்டவற்றை ஊட்டிவிட்டு ஆசி பெற்றனர். எதற்காக இருவரும் வழிபாடு நடத்தினார்கள் என்பது தெரியவில்லை.

From Around the web