குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் ஜி.பி. முத்து..?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் ஜி.பி. முத்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
gp muthu

தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் துவங்கி, இதற்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய சீசனில் ஏற்கனவே இருந்த கோமாளிகளுடன், புதிய கோமாளிகளும் இணைந்துள்ளனர்.

இதில் பலருடைய ஃபேவரைட்டாக இருப்பவர் தான் ஜி.பி. முத்து. அவருடைய நெல்லைத் தமிழுக்கும் அப்பாவியான நடிப்புத் திறமைக்கும் ரசிகர்கள் ஏராளம். நிகழ்ச்சித் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டங்களுக்கு போட்டியாளர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நடப்பு சீசனில் புதிய கோமாளிகளில் ஒருவராக களமிறங்கிய ஜி.பி. முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சென்னைக்கு மாறி வந்ததில் இருந்து, தொடர்ந்து உடல்நலம் குன்றி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. 

இதன்காரணமாக அவர் குக் வித் கோமாளி சீசன் 4-ல் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. மீண்டும் தனது சொந்த ஊருக்கே சென்று, வீடியோ தயாரித்து பதிவிட அவர் முடிவு செய்துள்ளாராம். இதனால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி. முத்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

From Around the web