தென்னிந்தியாவின் சூப்பர்ஹீரோ மின்னல் முரளி- ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
மின்னல் முரளி திரைப்படம்

மலையாளத்தில் தயாராகியுள்ள ‘மின்னல் முரளி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ கதையில் உருவாகியுள்ள படம் தான் மின்னல் முரளி. பாசில் ஜோசப் என்பவர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் ஹீரோவாக டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம், அஜுன் வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷமீர் தாஹிர் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஷுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

கேரளாவின் சிறிய நகரம் ஒன்றில் தையல் கடை வைத்திருக்கும் டோவினா தாமஸ் மின்னலால் தாக்கப்படுகிறார். அதனால் அவருக்கு சூப்பர் ஹீரோ பவர் கிடைக்கிறது. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதையாக உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை கிளப்பியது. மலையாளம் மட்டுமில்லாமல் பல்வேறு மொழி பார்வையாளர்களிடையே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது. இதன்மூலம் தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்த படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.
 

From Around the web