மகனின் விந்தணுக்கள் மூலம் குழந்தைக்கு தாயான நடிகை..!!

பிரபலமான நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான அனா ஒப்ரெகன், இறந்துபோன மகனின் விந்தணுவை பயன்படுத்தி பெண் குழந்தைக்கு தாயான சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
Ana Obregón

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அனா ஒப்ரெகன், நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு அவருடைய  ஒரே மகன் ஆலெஸ் லெக்யோ (27) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அதையடுத்து மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அனா ஈடுபட்டு வந்தார். 

இதையடுத்து கடும் முயற்சிகளுக்கு பிறகு ஒரு வார பெண் குழந்தைதை நடிகை அனா ஒப்ரெகன் தத்தெடுத்துக்கொண்டார். இந்த குழந்தை அமெரிக்காவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணுக்கு பிறந்த குழந்தையாகும்.

இக்கியூபா நாட்டு பெண் ஒரு வாடகை தாய் ஆவார். நடிகையின் இறந்துபோன மகனின் விந்தணு மூலம் இந்த பெண் குழந்தை பிறந்துள்ளது. இவ்விவகாரம் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குழந்தை ஆரோக்கியம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

Ana Obregón

மகனுடன் அனா ஒப்ரகென்

அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமாகும். அதனால் புளோரிடாவில் வசிக்கும் பெண் மூலமாக, செயற்கை கருத்தரிப்பு மூலம் அனா ஒப்ரெகன் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இறந்த மகனின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அது சாத்தியமாகியுள்ளது.

ana obregon

இவ்விவகாரம் ஸ்பெயினிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் குழந்தைகளின் தனியுரிமைக்கான உயிரியல் நெறிமுறைகளில் பிரச்னையை கொண்டு வரும் என அந்நாட்டு அரசு கருதுகிறது. ஆனால் அதுகுறித்து எதுவும் கண்டுகொள்ளாமல், அனா ஒப்ரெகன் மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்து, பேத்தியை மகளாக்கிக் கொண்டுள்ளார்.

From Around the web