கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு போஸ்டர்- ராதே ஷ்யாம் படக்குழு..!
 

 
ராதே ஷ்யாம்

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு ராதே ஷ்யாம் படக்குழு அதற்கான சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

பாகுபலி நாயகன் பிரபாஸ் அடுத்ததாக ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

கொரோனா காலக்கட்டத்தை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட போஸ்டரை ராதே ஷ்யாம் படக்குழுவினர் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. மயில் தோகையை உடலால் போர்த்தி பூஜா ஹெக்டே அணிந்துள்ள ஆடை அனைவரையும் கவர்ந்துள்ளது. 

From Around the web