ராமநவமியை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு !

 
1

பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். கடந்த ஆண்டே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணம் இப்படத்தின் டீசர் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனால் படத்தை ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்க உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். 

adipurush

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது.  புதிய யுக ராமரின் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ராமநவமியையொட்டி ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராமராக பிரபாஸ் மற்றும் சீதாவாக கீர்த்தி சனோன் ஜொலிக்கும் புகைப்படம் உள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

From Around the web