அம்மாவால் மது பழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீதேவி- பிரபல நடிகை தகவல்..!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது அம்மாவால் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக பிரபல நடிகை ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
sridevi

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிற்காலத்தில் கதாநாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடிப்பில் கொடிக்கட்டி பறந்தார் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அவரை, இந்தி திரைப்பட உலகம் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடியது.

சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த போதே, 1996-ம் ஆண்டு போனி கபூர் என்கிற திரைப்பட தயாரிப்பாளரை ஸ்ரீதேவி திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே தற்போது நடிகைகளாகிவிட்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஸ்ரீதேவி துபாயில் நடந்த உறவினரின் திருமண நிகழ்வுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த குளியல் அறையில், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ஸ்ரீதேவி. அவருடைய இறப்புக்கு மதுக்குடித்திருந்தது தான் காரணம் என்று தெரியவந்தது.

sridevi mother

அப்போது பிரபல நடிகை குட்டி பத்மினி தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு மதுப்பழக்கம் இருந்தது, அதனால் தனது மகள் ஸ்ரீதேவியையும் அவர் மதுவுக்கு அடிமையாக்கினார். தினமும் இரவில் ஒரு கிளாஸ் ஒயின் குடித்துவிட்டு படுப்பது ஸ்ரீதேவியின் வழக்கமாக இருந்தது என்று குட்டிபத்மினி குறிப்பிட்டுள்ளார்.

kutty padmini

ஸ்ரீதேவியும் குட்டிபத்மினியும் நெருங்கிய தோழிகளாக இருந்தது. இவர்கள் இருவரும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சேர்ந்து படங்களில் நடித்துள்ளனர். அவர் ஸ்ரீதேவியின் மதுபழக்கம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ, கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web