அம்மா இல்லைனா இதை தான் செய்வோம்: ஸ்ரீதேவி மகள் குஷி கபூர்..!

 
1

அம்மா ஸ்ரீதேவி இல்லாத நேரத்தில் தான் வீட்டில் செய்த காரியம் பற்றி குஷி கபூர் தெரிவித்ததை பார்ப்போம்.

தான் நடித்த படங்களை வீட்டில் பார்க்க அம்மாவுக்கு பிடிக்காது. ரொம்பவே வெட்கப்படுவார். அதனால் அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் நடித்த படங்களை நானும், ஜான்வியும் பார்த்து ரசிப்போம். மேலும் அம்மா நடித்த காமெடி காட்சிகளை போன்று நாங்களும் நடிப்போம்.

நானும், அக்கா ஜான்வியும் செட்டில் இல்லை என்றால் வீட்டில் படக் காட்சிகளை நடித்துக் காட்டுவோம் இல்லை என்றால் படங்கள் பார்ப்போம். ஒரு முறை ஓம் சாந்தி ஓம் படம் போன்று நடித்தோம். அதில் நான் ஷாருக்கான் போன்று நடித்தேன்.

அம்மா இறந்த பிறகு அக்கா எனக்கு அம்மா போன்று இருக்கிறார். எதை செய்யலாம், செய்யக் கூடாது என வழிநடத்துகிறார். என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார் என்றார்.

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்ததும் குஷி கபூர் தன் அறையில் அழுது கொண்டிருந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஜான்வி அம்மாவுக்கு நடந்தது தெரிந்ததும் வீட்டிற்கு வந்ததும் குஷி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அக்காவுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு குஷி அழுது தான் பார்த்ததே இல்லை என ஜான்வி கபூர் ஒரு முறை தெரிவித்தார். ஸ்ரீதேவி தன் மகள்கள் தன்னை போன்று நடிகையாகக் கூடாது என நினைத்தார். ஆனால் ஜான்வி, குஷிக்கு நடிகையாகத் தான் விருப்பம் என்பதை தெரிந்த பிறகு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குஷி கபூருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தது. நான் நடிகையாக மாட்டேன் அம்மா என கூறி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் நடிகையாவது என முடிவு எடுத்தார். ஜோயா அக்தர் இயக்கத்தில் வெளியான ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையானார் குஷி.

நடிக்க வரும் முன்பு அமெரிக்காவுக்கு சென்று நடிப்பு குறித்து படித்துவிட்டு வந்தார். குஷி கபூரை தமிழ் படங்களில் பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் அவர் வாழ்வில் காதல் வந்திருக்கிறது.

ஆர்ச்சீஸ் படத்தில் நடித்த வேதங் ரெய்னாவை காதலித்து வருகிறார் குஷி கபூர். ஆனால் காதல் பற்றி அவர் வெளியே பேச விரும்பவில்லை. இருப்பினும் வேதங் ரெய்னாவும், குஷி கபூரும் காதலிப்பதை அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்தார்.

From Around the web