ஜுனியர் என்டிஆர் ஜோடியாக தெலுங்கில் கால் பதிக்கும் ஸ்ரீதேவி மகள் ..!!

 
1

மறைந்த நடிகையான ஸ்ரீதேவி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக இருந்தவர். இவரின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் அறிமுகமாகி அந்த மொழியில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் தமிழில் நடிக்க வருகிறார், தெலுங்கில் நடிக்க வருகிறார் என்ற தகவல் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இப்போது அது உண்மையாகியுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்‘ படத்திற்கு பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள அவரது 30-வது படத்தின் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை நேற்று (மார்ச்.6) ஜான்வியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.

கடலும் மலையும் சார்ந்த இடத்தில் பாவாடை தாவணியில் சற்றே கிளாமராக ஒரு கல்லின் மீது ஜான்வி அமர்ந்திருக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், “கடைசியாக இது நடக்கிறது…. எனது அபிமான ஜுனியர் என்டிஆர் உடன் இணைந்து பயணிக்க இருப்பதை காத்திருக்க முடியவில்லை“, என தனது தெலுங்கு அறிமுகம் பற்றி குறிப்பிட்டுள்ளார் ஜான்வி கபூர்.

From Around the web