ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் நடிகையாகும் ஸ்ரீதேவியின் மகள்..!!
பாலிவுட் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான அவர், தற்போது பாலிவுட் உலகில் பிசியான நடிகையாக மாறி வருகிறார். குட் லக் ஜெர்ரி, மில்லர், பால்வா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி உள்ளிட்ட படங்களில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
இந்தியில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது முதன்முறையாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஜான்வி கபூர் பிறந்தநாளையொட்டி இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையொட்டி ஜான்வி கபூர் உள்ள வித்தியாசமான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முன்னணி இயக்குனரான கொரட்டலா சிவா இந்த படத்தை இயக்கவுள்ளார். 'ஜனதா கேரேஜ்' படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் மற்றும் கொரட்டாலா சிவா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.