பாலியல் அத்துமீறல் செய்த யஷ்..? நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்..!!

கே.ஜி.எஃப் படப்பிடிப்பின் போது கதாநாயகனாக நடித்த யஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூகவலைதளத்தில் எழுந்த புகாருக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
 
srinidhi shetty

கன்னடத்தில் தயாரான ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதில் யஷ் கதாநாயகனாகவும், ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படம் வாயிலாக இருவரும் தேசியளவில் பிரபலமானார்கள்.

இந்நிலையில் ட்விட்டரில் சினிமாத்துறை குறித்து அவ்வப்போது வதந்திகளை பரப்பி வரும் உமைர் சைது என்பவர் சமீபத்தில் ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார். அதில் கேஜிஎஃப் படப்பிடிப்பின் போது ஸ்ரீநிதி ஷெட்டியிடம், கதாநாயகன் யஷ் அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி  இனிமேல் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

yash

இந்த பதிவு வைரலானது. மேலும் யஷுக்கு பலரும் கண்டனங்களை பதிவிடத் தொடங்கினார். மேலும் பொதுமக்களும் யஷ் ரசிகர்களுக்குமிடையே வாக்குவாதம் மற்றும் மோதல் வெடித்தது. இந்நிலையில் உமைர் சைதுவின் ட்வீட்டுக்கு தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நடிகர் யஷ் தொடர்பான வெளியானது தகவல் முற்றிலும் தவறானது. அவர் ஒரு நல்ல மனிதர். என்னிடம் ஒருபோதும் அவர் அத்துமீறியது கிடையது. கே.ஜி.எஃப் படத்தில் எனக்கு எந்தவிதமான சங்கடமும் ஏற்படவில்லை. யஷ் ஒரு ஜெண்டில்மேன். அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று ஸ்ரீநிதி ஷெட்டி கூறியுள்ளார்.

From Around the web