சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்கும் ஸ்ரீவித்யா..?

 
சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்கும் ஸ்ரீவித்யா..?

தமிழில் முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஸ்ரீவித்யா, சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடித்து வருவதாக வெளியான செய்தி குறித்து உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீவித்யா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட ரெமோ மற்றும் காக்கிச் சட்டை என அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் கார்த்தியுடன் காஷ்மோரா, விஷ்ண் விஷாலுடன் ஜீவா என ஸ்ரீவித்யா நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன.

இந்நிலையில் விஷாலுடன் மருது மற்றும் ஆர்யாவுடன் பெங்களூரு நாட்கள் படங்களுக்கு பிறகு ஸ்ரீவித்யாவுக்கு பெரிதாக வாய்ப்பு வரவில்லை. இதனால் அவர் தெலுங்கில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியலில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

அதுதொடர்பாக ஆராய்ந்த போது அவை ஸ்ரீவித்யா சினிமாவில் வருவதற்கு முன்னதாக நடித்த சீரியல்களாகும். மேலும் அதர்வாவுடன் தற்போது ஒரு படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.  ஒத்தைக்கு ஒத்தை என்ற பெயரில் தயாராகியுள்ள அந்த படம் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web