வேறு வழியின்றி அட்ஜெஸ்ட் செய்தேன்: ஸ்ருதிஹாசன் கூறும் உண்மை..!!

வால்டர் வீரய்யா படத்தில் தனது தந்தை வயதுடைய நடிகருக்கு ஜோடியாக நடித்தது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ள தகவல் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
sruthi haasan

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், மும்பையில் வசித்து வருகிறார். இந்திப் படங்களில் பணிபுரிந்தவாறே தென்னிந்தியப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சிரஞ்சீவி உடன், அவர் நடித்த வால்டர் வீரய்யா தெலுங்குப் படம் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றது.

தனது தந்தையின் வயதுடைய நடிகருடன், ஸ்ருதிஹாசன் நடித்தது மிகப்பெரியளவில் விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக யு-ட்யூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்த போது, நடிப்பு என் தொழில். எனது கதாபாத்திரம் மட்டுமே எனக்கு முக்கியம், மற்றவை எல்லாம் அதற்கு பிறகு தான். நடிகர் சிரஞ்சீவியுடன் நடித்தது எனக்கு தான் பெருமை என்று கூறினார்.

மேலும் அதே நேர்காணலில் பனிப் பிரதேசத்தில் மெல்லிய உடைகள் அணிந்து, ஹீரோவுடன் ட்யூட் பாடியது தொடர்பாக கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், எப்போதும் திரைப்படங்களில் பெண்கள் சிறிய உடை தான் அணிகின்றனர். பொதுவாக எனக்குப் பனியில் ஆடவே பிடிக்காது. ஆனால் சிரஞ்சீவி படம் என்பதால், வேறு வழியின்றி அட்ஜெஸ்ட் செய்துகொண்டேன் என்று ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசிவிட்டார். 
 

From Around the web