கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் ஸ்ருதி ஹாசன்..?

 
ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து கமல்ஹாசன் தனது விக்ரம் பட பணிகளில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல அப்போது வெளியிடப்பட்ட படத்தின் டீசரு ரசிகர்களிடையே வரவேற்பை குவித்தது.

கொரோனா ஊரடங்கு, தமிழக சட்டப்பேரவை தேர்தல், தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தாமதமாகி வந்தன. அதற்கு கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மேலும் படத்தின் பணிகள் தாமதமாகியுள்ளன.

எனினும் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ‘விக்ரம்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஃபகத் பாசில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழு விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஸ்ருதி ஹாசன் விக்ரம் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அதன்படி  ’அப்பா கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

From Around the web