ஸ்ருதி ஹாசனின் வாடஸ் ஆப் நம்பர் வெளியானது- நீங்களும் கால் பண்ணி பேசலாம்..!

 
ஸ்ருதி ஹாசனின் வாடஸ் ஆப் நம்பர் வெளியானது- நீங்களும் கால் பண்ணி பேசலாம்..!

சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது  தன்னிடம் வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ஒருவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் அளித்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை என்பது ஸ்ருதி ஹாசனின் மனக்குறையாக இருந்து வருகிறது. எனினும் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்துள்ள லாபம் படத்தின் மீது மிக நம்பிக்கையை வைத்துள்ளார் ஸ்ருதி.

தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் மற்றும் கிராக் ஆகிய படங்கள் நல்ல வசூலை பதிவு செய்து வருகின்றன. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூகவலைதள பகக்த்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.


அதில் ஒரு ரசிகர் ஸ்ருதி ஹாசனிடம் அவருடைய வாட்ஸ் ஆப் நம்பரை கேட்டார். இதற்கு ஸ்ருதி, போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரை குறிப்பிட்டுள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசனின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலாக் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 
 

From Around the web