40 வயதைக் கடந்து எனக்கு திருமணமாகவில்லை- பிரபல நடிகை உருக்கம்!!

நாற்பது வயதை கடந்த பிறகும் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வருவது குறித்து சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் மனம்விட்டு பேசியது பலரையும் உருக்கமடையச் செய்துள்ளது.
 
 
sruthi raj

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்தவர் ஸ்ருதி ராஜ். தொடர்ந்து சரிவர சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் களமிறங்கினார். அவர் நடித்த முதல் சீரியல் சன் டிவி-யில் ஒளிபரப்பான தென்றல்.

விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்த இந்த தொடர், பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் அவர் நடித்த ஆஃபிஸ் தொடரில் ஸ்ருதி ராஜுக்கு சிறப்பான வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தாலாட்டு’ என்கிற தொடரில் நடித்து வருகிறார். அதுவும் விரைவில் நிறைவடையவுள்ளது. அதையொட்டி சமூகவலைதள ஊடகத்துக்கு நடிகை ஸ்ருதி ராஜ் நேர்காணல் அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

எனக்கு இப்போது 40 வயதை கடந்துவிட்டது. எனினும் நான் தனியாக இருக்கிறேன். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. என்னை சந்திக்கும் பலரும் எனது திருமணம் குறித்து கவலைப்படுகின்றனர். அவர்களிடம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எதையும் நான் திட்டமிட்டு செய்வது கிடையாது. திருமணத்தையும் இதுவரை திட்டமிடவில்லை. எனது பெற்றோர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
 

From Around the web